இந்தியாசெய்திகள்

பப்ஜி விளையாடிய இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய வயோதிபர்!!

Babji game

இந்தியாவில் பப்ஜி விளையாடிய இளைஞரை வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞர் இரவு நேரத்தில் வீட்டின் மாடிக்கு சென்று தனது நண்பர்களுடன் இணைந்து சத்தமாக பப்ஜி விளையாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் அருகில் வசிக்கும் வயோதிபர், குறித்த இளைஞரை எச்சரித்து வந்துள்ளதுடன், இது தொடர்பில் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோல் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், அது பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கோபமடைந்த வயோதிபர், குறித்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button