செய்திகள்புலச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வழங்கப்பட்ட “வெற்றியாரம்-2024” சிறப்பு விருதுகள்!!

Awards

 அண்மையில் தமிழீழ பெண்கள் உதைபந்தாட்ட அணிசார்பாக சுவிட்சர்லாந்தில் இருந்து சென்று முத்திரை பதித்த நான்கு வீராங்கனைகள்,பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறை இணைப்பாளர் ஆகியோர் சுவிஸ் நாட்டில்  “சிறப்பு விருது” பெற்றனர், 

இன்று(15.06.2024) பல்துறை ஆற்றலோன் திரு.வைகுந்தன் செல்வராசா அவர்களின் தனிமனித முயற்ச்சியிலும் தொழில் நிலைய அனுசரனையாளர்களின் ஆதரவிலும் சுவிட்சர்லாந்தின் வேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற சாதனைவீரன் அழிக்குமரன் ஆனந்தன் நினைவு சுமந்த

“வெற்றியாரம் 2024” நிகழ்வு ஐரோப்பா தமிழர் மதிப்பளிப்பு கழக ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பெரும் சிறப்பு என்னவெனில் பல்துறை சார்ந்த ஆற்றுகையாளர்கள் சிறப்பு விருதுகள் பெற்றமையோடு நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மிக அருமையாக தமிழ்மொழி சாராதோர் பாடியது  அனைவரையும் விழி உயர்த்திப் பார்க்கவும், செவிமடுக்கவும் வைத்தது. 

பாரம்பரிய கலை ஆற்றுகையாளர்கள், முதிய, இளைய விளையாட்டுத்துறை சார்ந்தோர், பளுதூக்கும் வீரர், யோகா கலை பயிற்றுவிப்போர், தற்காப்புக் கலையாளர்கள், இலக்கியத்துறை சார்ந்தோர், இசைத்துறை சார்ந்தோர், மனிதநேய செயற்பாட்டாளர், சமூக நலன்சார் செயற்பாட்டாளர்கள் என இன்னும் பல விடயப்பரப்புகளை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திரளான பார்வையாளர்கள் நிறைந்திருக்க   நடன,பொம்மைக் கூத்து,யோகா ஆற்றுகைப் போட்டி,யோகா நிகழ்வு,தற்காப்புக் கலை,பாடல்கள்,உரைகள் என்பனவும் நடைபெற்று நிறைவடைந்தது. 

பிரான்ஸ் நாட்டிலிருந்தும், கனடா போன்ற ஏனைய நாடுகளிலிருந்தும் ஆக்ககர்த்தாக்கள் வருகை தந்து சிறப்புப் பெற்றனர்.

இந் நிகழ்வானது வருடந்தோறும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இம் முயற்ச்சியை பல்துறை சார்ந்த ஆற்றலோன் திரு.வைகுந்தன் செல்வராசா அவர்களே ஏற்பாடு செய்து நடாத்தி வருவதை பலரும் தம் உரையில் முதன்மைபடப் பேசியிருந்தனர்.

எமது இணையதளம் சார்பில் திரு.வைகுந்தன் செல்வராசா, இணை ஏற்பாட்டாளர்களை பாராட்டுவதோடு

“விருது” பெற்றோர்கு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம். 

         தகவல்,-  து.திலக்(கிரி),

            சுவிஸ். 

Related Articles

Leave a Reply

Back to top button