ஆன்மீகம்செய்திகள்

இராசி பலன் – உங்களுக்கு எப்படி!!

Astrology

மேடம் – இன்று மாலை வரை நண்பர்களால் ஏற்பட்ட சில சங்கடம் நீடிக்கும். செலவு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

இடபம் – வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வேலைக்காக எதிர்பார்த்த தகவல் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

மிதுனம் – நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாக குலதெய்வத்தை வழிபடும் நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெரியோர் ஆதரவுடன் தீர்வு காண்பீர்கள்.
நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.

சிம்மம் – இன்று மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயலில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னி – இன்று மாலை வரையில் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அதன் பின் இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் ஈடேறும்.

துலாம் – தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
எதிர்பார்த்த தகவல் வரும். அதலால் நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆதாயமான நாள்.

விருச்சிகம் – வியாபாரத்தில் இன்று உங்கள் அணுகுமுறையால் அதிக லாபம் ஏற்படும். உண்டாக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.

தனுசு – உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரியின் ஆதரவால் உங்கள் எண்ணம் ஒன்று ஈடேறும்.

மகரம் – உறவினர் ஒருவர் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கும்பம் – உத்தியோகத்தில் இருப்பவர்களுடைய எண்ணம் நிறைவேறும் நாள். உடல் நலத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசு வழியில் நன்மை உண்டாகும்.

மீனம் – குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Back to top button