இந்தியாசெய்திகள்

தொழிநுட்ப உலகை இயக்கும் இந்தியர்கள் –2!!

Arvind Krishna - IBM

அரவிந்த் கிருஷ்ணா – ஐபிஎம்

1962-ல் ஆந்திராவில் பிறந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. தனது இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பை கான்பூர் ஐஐடியிலும், தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் இல்லினாய் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1990-ல் ஐபிஎம்மில் இணைந்த அவர் ஐபிஎம்மின் ஆய்வுத்துறை, க்ளவுடு சேவை தொடர்பான துறைகளில் துணைத் தலைவர் பதவி வகித்திருக்கிறார். 2019-ல் ரெட் ஹேட் (Red Hat) என்ற அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை வாங்கியது ஐபிஎம். 34 பில்லியன் டாலர் மதிப்பில் ரெட் ஹேட் வாங்கப்பட்டதன் பின்னணியில் அரவிந்த கிருஷ்ணாவின் பங்கு நிறையவே இருந்தது. இதனைத் தொடர்ந்து 2020 ஏப்ரலில் ஐபிஎம்மின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்படுகிறார் அரவிந்த் கிருஷ்ணா. அதன் பிறகு 2021 ஐனவரியில் ஐபிஎம்மின் தலைவராகவும் (Chairman) பணியமர்த்தப்படுகிறார். தற்போது ஐபிஎம்மின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என இரு பொறுப்புகளையும் அரவிந்த் கிருஷ்ணாவே கவனித்து வருகிறார். நன்றி – விகடன்

Related Articles

Leave a Reply

Back to top button