அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 14 இந்திய மீனவர்கள் நேற்று யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான இந்திய மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர், அவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.