போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் உள்ளவர்களின் கடவுச் சீட்டுக்கள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுஅகல, லபுகம வீதியில் அலுவலகத்தைச் சோதனையிட்ட போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களின் 301 கடவுச்சீட்டுகளும், வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தேவையான பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. எனவே இவ்வாறான மோசடி குழுக்களுக்கு இரையாக வேண்டாம் என பணியகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.