இலங்கைசெய்திகள்

கட்சி அரசியல் மீது குற்றம் சுமத்தும் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டு!!

Arjuna Ranatunga

“கட்சி அரசியலே நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. ஒவ்வொரு கட்சிகளிலும் ஒவ்வொரு கொள்கை பின்பற்றப்படுகின்றது. எதிர்காலத்தில் கட்சி அரசியல் பேதமின்றி, நாட்டின் நலன் கருதி செயற்பட நான் தயாராகவுள்ளேன்.”

  • இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகித்ததாகவும் தற்போது கட்சி அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button