இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

இன்று (21) முதல் நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்பதற்காகப் பாடசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பல அதிபர் சங்கங்கள் இன்று பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

அதிபர்கள் பாடசாலைக்கு வருகின்றனர் என்பதானது எவ்வித பிரச்சினையும் இல்லை என்ற நிலையினை உறுதிப்படுத்துகின்ற நிலையில் பெருமளவான ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டத்தின் கீழ் 3,000 பாடசாலைகளைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

கொவிட் பரவல் காரணமாக, ஆறு மாதங்களுக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த பாடசாலைகள், இன்று மீள ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button