கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல பகுதிகள் புகைமூட்டத்தால் சூழ்ந்துள்ளன.அயோவா (Iowa), இலனோய் (Illinois), விஸ்கோன்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), ஒஹாயோ (Ohio), நியூயார்க், வாஷிங்டன் D.C போன்ற மாநிலங்கள் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
100 மில்லியனுக்கும் அதிகமானோர் அவதியுறுகின்றனர்.வெளிப்புற நடவடிக்கைகளில் பெருமளவில் குறைத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அங்கு மோசமடைந்திருக்கும் காற்றின் தரத்தைப் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடாவில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 8 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு காட்டுப்பகுதி எரிந்துள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட கனடாவின் டொரொண்டோ (Toronto) நகரில் காற்றுத்தூய்மைகேட்டுக் குறியீடு உச்சத்தைத் தொட்டுவிட்டது.உலக நாடுகளின் முக்கிய நகரங்களுடன் ஒப்புநோக்க தற்போது டொரொண்டோவின் உள்ள காற்றின் தரமே ஆக மோசமானதாகக் கூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீ அணைக்கப்பட்ட பிறகும் சுகாதார அபாயம் நீடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.அமெரிக்காவைச் சுட்டெரிக்கும் வெயிலும் வாட்டுகிறது.கடுமையான வானிலையால் அண்மை நாள்களில் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.