தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளஒரு காணொளியில், ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருக்கும் காணொளியைக் காண முடிகிறது.
இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர்.
இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார் என்பது இப்போது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அங்கு சிலர், இப்போதே ஹாலோவீனுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஏற்பாடுகளில் ஒரு அங்கமாகவும் இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வீடியோ காண்பவர்களை வியக்க வைக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், எந்த வித பிடிமானமும் இன்றி, ஒரு பெண் காற்றில் தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.
அவர் இரண்டு கைகளையும் விரித்து, அதே இடத்தில் குதிகாலின் துணை கொண்டு காற்றில் நிற்கிறார். ஹாலோவீன் வருவதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளன.
இந்த முறை ஹாலோவீனின் கருப்பொருள் அதாவது தீம், Netflix இன் பிரபலமான இணையத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதை மனதில் வைத்து இவர் இப்படிப்பட்ட செயலை செய்துள்ளாரோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.
பெண் காற்றில் ஆடும் இந்த வீடியோவை முதலில் சமூக ஊடக தளமான Tiktok இல் டேவ் மற்றும் ஆப்ரே சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். இங்கிருந்து மீண்டும் அது பல்வேறு தளங்களில் வைரலானது.
இதுவரை இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.