இலங்கைசெய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Advanced Exam

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் போலியான நேர அட்டவணை சமூக இணையத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான நேர அட்டவணை பகிரப்படுவதன் காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு தாமதமாக வருகை தருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக உரிய நேர அட்டவணையினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் 0112 784 208 அல்லது 0112 784 537 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 1911 எனும் துரித இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button