அம்பாறை – தமன – எங்கலோய பிரதேசத்தில் மகிழுந்து மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.