இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவிப்பு!!

A/Lexam

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (7) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாளை(7) முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை, 2,437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

345, 242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களில், 279,141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button