இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வவுனியா நகரில் இராணுவ பிக்கப் ரக வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் – மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து புகையிரத வீதி நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்ட வேளை மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

Gallery
Gallery
Gallery
Gallery

Related Articles

Leave a Reply

Back to top button