இன்றைய (03.10.2024 – வியாழக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
இலங்கைக்கு ஓராண்டு கால அவகாசம்!!
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஒரு வருட அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருலதாக அமெரிக்க தூதுவர் ஜுலிசங் தெரிவித்துள்ளார்.
2.
கிழக்கில் கூட்டிணைவா!!
திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசுக்கட்சியும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
3.
யானைச் சின்னத்தில் போட்டி!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கட்சியினர் யானைச்சின்னத்தில் போட்டியிடவுளாளதாக கூறப்படுகிறது.
4.
தோல்வி பயத்தில் அவதூறு பரப்புகின்றனர்!!
எம் மீது மீண்டும் அவதூறுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளியிடுவதற்கு தாங்கள் தோற்றுப் போவோம் என்கிற எண்ணமே காரணமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
5.
இந்திய பிரதிநிதி நாளை இலங்கை வருகிறார்!!
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி, எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
6.
குற்றங்களை நிரூபிகாகட்டும் – சவால் விட்ட நாமல்!!
ராஜபக்சக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல வெளிநாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புதிய ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி