இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் ( 20.09.2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

1.

புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் வெளியானமை தொடர்பில் CID விசாரணை!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2.

தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துக!! 

தேர்தலுக்கான சகல புதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

3.

இலங்கையின் கடன் தொடர்பில்  உலக வணிக கடன் வழங்குநர்கள் இணக்கம்!!

இலங்கையின் 1750 கோடி கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வணிக கடன் வழங்குநர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. 

4.

நல்லூரில் திலீபன் ஆவணக்காட்சியகம் திறந்து வைப்பு!! 

தியாக தீபம் திலீபனின் ” பார்த்தீபன் திலீபனாக – திலீபன் தியாக தீபமாக”  என்னும் ஆவணக்காட்சியகம் இன்று நல்லூரில் திறந்து வைக்கப்படவுள்ளது. 

5.

அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கை!!

சகல மக்களும் சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் தேர்தலை நடப்பதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் கண்காணிப்பு குழு தலைவர் அறிவிப்பு விடுத்துள்ளார். 

6.

வித்தியாசமான முறையில் நடந்த அறுவைச் சிகிச்சை!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை காண்பித்து பெண்ணொருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளது வியக்க வைத்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button