இன்றைய (20.07.2024) பத்திரிகை முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!
News
1.
உலகளவில் முடங்கியது மைக்ரோசொப்ட்!!
நேற்று வெள்ளிக்கிழமை உலகளவில் மைக்ரோசொப்ட் இயங்குதளம் முடங்கியதால் வங்கிகள், பங்குச் சந்தை, ஊடக நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் என்பன தொழிற்றடமுடியாமையால் பெரும் பாதிப்புகளும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
2.
யாழில் இருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்து!!
யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 30 க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
3.
புதிய வர்த்தமானி வெளியானது!!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அரசமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியானது.
4.
தேர்தல் வாக்குறுதி தொடர்பில் கையெழுத்து சேகரிப்பு!!
பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் வழங்குகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்த கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
5.
அரசமைப்பு குறித்து அச்சம் வேண்டாம் என்கிறார் ரணில்!!
அரசமைப்பு திருத்தம் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனத்தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
6.
வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை வர்த்தகர்கள், மக்களுக்கு வழங்காவிடின் சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என வர்த்தகவாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், நளின் பெர்ணாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.