இன்றைய ( 09.07.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
இவ்வருடம் சம்பள அதிகரிப்பு கிடையாது – ஜனாதிபதி திட்டவட்ட அறிவிப்பு!!
இவ்வருடம் ஒதுக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் அரச உழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2.
ஜனாதியுடனான கூட்டணி நிராகரிப்பு!!
பெரமுன கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியுனான கூட்டணியை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
3.
கொழும்புக்குச் சென்றார் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்!!
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து வைத்தியசாலை அத்தியாட்சகர் அர்ச்சனை இராமநாதன் வெளியேறியுள்ளார். தான் மீண்டும் வருவேன் என மக்களுக்கு உறுதியளித்த பின்னரே அவர் கொழும்பு சென்றுள்ளார்.
4.
அநீதியான போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியைக் குலைக்க வேண்டாம் என அரசு அறிவிப்பு!!
அநீதியான போராட்டங்களை முன்னெடுப்பதால் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
5.
14 துறைகளுக்கு வரி!!
இன்னும் 14 துறைகள் குறித்து அவதானித்து அவற்றிலிருந்து வரி அறவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி