1.
ஆட்கடத்தல் விவகாரத்தில் அதிகாரிகளை பொறுப்பு கூறச்செய்ய இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை!!.
ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக குறைந்த பட்ச தராதரங்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்கா கண்டித்துள்ளது. எனினும் இலங்கை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.
மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!
புதுக்குடியிருப்பபில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3.
இலங்கையை மீட்ட என்னுடன் பயணிக்க வேண்டுமா அல்லது இருளில் வாழவேண்டுமா என மக்களே தீர்மானியுங்கள் – ஜனாதிபதி ரணில்!!
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட என்னுடன் தொடர்ந்து பயணிப்பதா அல்லது இருட்டில் நின்று அதிகாரத்தை தேடும் எதிரணியினருடன் பயணிக்கப் போகிறீர்களா என்பதை மக்களே தீர்மானியுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
3.
ஐ. சி. சி யில் இலங்கையைப் பாரப்படுத்துவதே நீதிக்கான வழி – பிரிட்டன் தேர்தலில் களமிறங்கும் பெண் தெரிவிப்பு!!
ஐ. நா பாதுகாப்பு சபையில் இலங்கையைப் பாரப்படுத்தினால் மட்டுமே நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளரான உமா குமரன் தெரிவித்துள்ளார்.
4.
.கடன் வழங்குநர்களுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் நிறைவு!!
நேற்றைய தினம் பாரிஸ் மற்றும் சீன வங்கியுடனான கடன் ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
5.
அதிபர் ஆசிரியர் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!!
அதிபர் ஆசிரியர்களால் சம்பள முரண்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி