சிங்கப்பூரில் வசிக்கும் பாலசிங்கம் பாலகாசன் அவர்கள் மண்ணுக்காக விதையாகிப்போன தனது சகோதரன் மாவீரர் ஜனார்த்தனன் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனையும்,கணவனையும் இழந்த தாயார் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பிற்காக பசு ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
தாய் மண்ணின் விடிவிற்காக போராடி ஆகுதியாகிய சகோதரனின் நினைவாக ஒரு குடும்பத்துக்கு உதவி புரிந்த பாலாவிற்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் உதவி பெற்றுக்கொண்டோர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் அணையாத தீபமாகிப்போன சகோதரனிற்கு பலரும் தமது அஞ்சலியினைத் செரிவித்துள்ளனர்.