அரியாலையைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா திருச்செல்வம் (ஓய்வுநிலை ஆசிரியர்) 11.10.2023 புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலம் சென்ற சின்னையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலம் சென்ற தர்மலிங்கம் – அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும், சரோஜாவின் அன்புக் கணவரும், துஷ்யா (ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், தீவகம்) துஷானந் (சாரதி பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்) துஷாமினி (ஆசிரியர் யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்) துஷாயினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், புவியரசி (மு.சே.உ மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) ராஜ்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழில்துறை திணைக்களம் சாவகச்சேரி) சர்வானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஓவியா, அக்ஷேத்ரா, தக்சன்யா, சாய்கவி, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும், மங்கையற்கரசி, அமிர்தலிங்கம், தருஞானசெல்வம், செல்வராசா, இராஜநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பாஸ்கரன், ஸ்ரீதரன், கமலாகரன், தயாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 12.10.2023 (இன்று) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிஜைக்காக மட்டுவில் தெற்கு, சின்னத்தூ இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு;
077 11 13 967
077 71 10 445
077 23 65 372