கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் அமரர் அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் மூன்றாவது வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!

Seminar

  ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் , அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் மூன்றாவது வினாத்தாள்   இன்று காலை பத்து மணியளவில்  வெளியிடப்படவுள்ளது.

திருமலையின் பிரபல ஆசிரியரும் யாழ். பார்வை ,  யாழ். ஆசான் ஆகிய இதழ்களின் ஆசிரியருமான திரு. ஆ. ஜெயநேசன் அவர்களின் தயாரிப்பு வினாத்தாள் இன்று  வெளியாகவுள்ளது.

குறித்த வினாத்தாளுக்கான விளக்க வழிகாட்டல் எதிர்வரும் (13.09.2023) இரவு 8.00 மணி தொடக்கம் 9.30 வரை ஆசிரியர் திரு. ஜெயநேசன் அவர்களால்  zoom (சூம் ) ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இக்கருத்தரங்கில் பிரதம விருந்தினராக யாழ். மத்திய கல்லூரி முதல்வர் திரு. இந்திரகுமார் அவர்களின் சிற்புரையும்  இடம்பெறவுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த நேரத்தில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button