இலங்கைசெய்திகள்

யாழில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது போராட்டம்!!

Jaffna

யாழில் நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை), மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாண நகரில் சமூக நீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தேசிய கொடியை ஏந்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.

இதன்போது அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், தற்போதுள்ள நிலையில் இவ்வாறு அதிகளவானோர் ஒன்றுகூடி போராட்டங்களை நjaடத்த முடியாது என கூறினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறும் இல்லாவிடின் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button