17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில், கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப் பதக்கங்களையும், மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹோசித்மி பெஹன்சா சமரவீர மற்றும் இரத்தினபுரி பெர்குசன் உயர் கல்லூரியின் இலிஷா உமண்டி ஆகியோர் தங்கப்பதக்கத்தினையும்
வத்தளை லைசியம் கல்லூரியின் துலன் பிம்சாட் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கங்களை வென்ற இலங்கை சதுரங்க அணி இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.