முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் இவ் விடயம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அநியாயமான முறையில் வியாபாரம் நடைபெறுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சில இடங்களில் முட்டை விலை 60 ரூபாவுக்கு மேல் உயர்ந்து வருகிறது, முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவுக்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.