இலங்கைசெய்திகள்

திருமணம் செய்த பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து தற்கொலை!!

Death

 கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்,  சிறுவயதிலேயே திருமணம் முடித்த இவர்,  கல்வியில் சிறந்து விளங்கியவர் என்பதால் திருமணத்தின் பின்னரும் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மரணம் நண்பர்கள்,  உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய காலத்தில் இளையோர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை அதிகரித்துள்ளது எனவும் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button