பாகிஸ்தான் நாட்டில் ஆட்சியிலுள்ளவர்கள் உரிய காலத்தில் உரிய முறையில் தேர்தலை நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நிலையே தமது நாட்டிலும் உருவாகும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவிக்கையில்,
தமது நாட்டில் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற பாரியதொரு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை தடுத்தால் அவர்கள் வீதிக்கு இறங்கி வன்முறையில் ஈடுபடும் போது அவர்களுடைய பலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அதிகாரத்திலுள்ள அரசாங்கம் தோல்வியடைந்து அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதே தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிற்போடப்பட்டால் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.