கொத்தடுவ பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பத்து இலட்சத்து 8000 கிலோ அரிசி கண்டெடுக்கப்பட்டதாக கொத்தடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் களஞ்சியசாலையில் உள்ள அரிசி மாதிரிகள் இன்று (29) எடுக்கப்பட உள்ளதாக நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திரு.அஜித் விதானகே தெரிவித்தார்.
அரிசி களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அஜித் விதானகே தெரிவித்தார்.