வேண்டிய மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும்
இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே எனவும் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு நாட்டில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.