தரம் 5 புலமை பரிசில் குறைந்த புள்ளி எடுக்கும்
மாணவர்களில் கலைஞர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு கணிதம் தேவைப்படாது.
அங்கே தொழிலதிபர் இருப்பார்கள் அவர்களுக்கு வரலாறு/ இலக்கியம் முக்கியமில்லை
விஞ்ஞானி இருப்பார்கள் அவர்களுக்கு இரசாயன்வியல் அவசியமில்லை.
விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள் உடல் நலனே முக்கியம் பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.
பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் சிறந்த பிள்ளைகள் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவர்கள் என்று தயவுசெய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.
அவர்களுக்குச் சொல்லுங்கள், ‘இதுவெறும் ஒரு பரீட்சை மட்டுமே, நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன்மீதுள்ள என் அன்பு நீங்கள் பரீட்சையில் எடுக்கும்
மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை.
என்றும் நீ என் பிள்ளை, என்உயிர் ‘ இப்படிச் சொல்லிப் பாருங்கள் , பரீட்சையில் வெல்லாத
உங்கள் பிள்ளைகள் ஒரு நாள் உலகை வெல்வார்கள்.