அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பனாமாவிலிருந்து நியூயார்க்கிற்கு 425 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் சூறாவளியில் சிக்கி மூழ்கியது. SS Central America-வில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஜீன்ஸ், மெக்சிகோ-அமெரிக்கப் போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமென்ட் என்பவருக்குச் சொந்தமான பெட்டி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.