இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

மலையகத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.

இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான  பேருந்து சேவை இடம்பெற்றது.

நுவரெலியா – கொழும்பு, பதுளை – கொழும்பு, கம்பளை – கொழும்பு, பூண்டுலோயா – கொழும்பு, கண்டி – பதுளை, ஹட்டன் – இரத்தினபுரி உட்பட மேலும் பல பேருந்து சேவைகள் இடம்பெற்றன.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை மீறும் பேருந்துகளுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Gallery
Gallery

Related Articles

Leave a Reply

Back to top button