செய்திகள்பொருளாதார செய்திகள்முக்கிய செய்திகள்

முக்கிய தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்!!

Central Bank Governor

பொருளாதார நெருக்கடியானது பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதை ஈடுகட்ட நாடு பெருமளவு கடன் வாங்குவதால் அது கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் கடுமையான நிதிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டுமெனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்துவது போன்ற முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசுகள் மீது அல்ல, நாட்டு மக்கள் மீது நேரடியாக திணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது மக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button