சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் , யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகரசபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் குடியிருப்புக்களுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும்.
வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள்குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள்.
அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களேபொறுப்பு கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்துரூபா 3000.00 குற்றப்பணமாக அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.