எறிகல் ஒன்றை டார்ட் செய்மதி மூலம் மோதி நடத்தப்பட்ட சோதனை அண்மையில் வெற்றியளித்திருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
பூமியை நோக்கி வருகின்ற எறிகற்களை திசைத்திருப்ப முடியுமா? என்பது தொடர்பான பரிசோதனைக்காக பூமியில் இருந்து அனுப்பப்பட்ட டார்ட் செய்மதி, டிமோஃபோர்ஸ் என்ற எறிகல்லை சில வாரங்களுக்கு முன்னர் மோதியது.
இதனை அடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் குறித்த எறிகல் தமது தாய் எறிகல்லை சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் இருந்து விலகி புதிய பாதைக்கு மாறியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனால் பூமியை நோக்கி வருகின்ற எந்த பொருளாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாசா தயராகி வருவதாக நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.