உலகம்செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு. ஜப்பானில் நிரந்தர குடியுரிமை- வெளியான. மகிழ்ச்சி தகவல்!!

Japan

வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நாடுகளின்  ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டமானது நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த, திருத்தப்பட்ட புதிய சட்டமானது 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன.

 குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக மூன்று ஆண்டுகளுக்குள் ஜப்பானில் பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.

தாதித்தொழில்,  , கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பல துறைகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

 ,புதிய சட்டத்தின் கீழ் ஜப்பானில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள், அரசாங்கத்திற்கு வரி மற்றும் பிற கொடுப்பனவுகளை வேண்டுமென்றே செலுத்தத் தவறினால் அவர்களின் நிரந்தர வதிவிட அனுமதி  இரத்து செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button