உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைப்பதாகவும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் மாணவர்களினால் நீண்ட காலம் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் 2022ம் ஆண்டு பரீட்சை நடாத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
இரண்டாம்,மூன்றாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.