உலகம்செய்திகள்

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் திடீர் மரணம்!!

Camilo Che Guevara

நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா(Camilo Che Guevara) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக சே குவாரா திகழ்பவர். கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.

சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா(Camilo Che Guevara). இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவாரா (Camilo Che Guevara)வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60 ஆகும். கமீலோ சேகுவாராவின்(Camilo Che Guevara) மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து கமிலோ சே குவாராவின்(Camilo Che Guevara) மறைவுக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதன்போது கமிலோ சே குவாராவின்(Camilo Che Guevara) மறைவுக்கு கியூபா அதிபர் டயஸ் கேனல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது சிந்தனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button