- மட்டக்களப்பு- காத்தான்குடிப் பகுதியில், அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து வயது மாணவன் ஒருவர் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று, சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்த போது, அதிபர் சிறுவனைக்கண்டு, அருகில் வரவழைத்து “இந்தச் சாப்பாட்டுப் பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் வந்தது ?” எனக்கேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவன் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்றுவந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும்
சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022 டிசம்பரில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை தேவையில்லை என
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. - கண்டியில் இருந்து மாத்தறைக்கு செல்லும் ரயில் பெம்முல்லவில் பழுதடைந்துள்ளதால், கம்பஹா ரயில் சேவைகள் பிரதான பாதையில் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் நெடும்பயணத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இன்று காலை 9.00 மணிக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலிலிருந்து, டிப்போச்சந்திவரை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
- பாகிஸ்தான் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது சீனா தயாரித்த பாகிஸ்தான் போர்க்கப்பல் PNS Taimur கொழும்புத் துறைமுகத்தை காலை வந்தடைந்தது.இது, அதிநவீன ஆயுதங்கள், சென்சர் கருவிகள் மற்றும் லேசர் உதவியுடன் இயங்க கூடிய ஏவுகணைகளைக் கொண்ட போர் கப்பலாகும்.
- ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தனிஸ் அலி மற்றும் 3 பேரை எதிர்வரும் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கல்விஅமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சிக்கும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2021/2022 கல்வியாண்டு முதல் கா.பொ.த.(உயர் தரப்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாகும் என ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியில் ஹட்டன், ஹைலன்ஸ் தேசிய பாடசாலை மாணவன் பி.பிரதீப் ,19 வயதுக்குற்பட்ட, 54-57 எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
- 2 ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் அடியில் புதைந்துள்ளதாகவும் கடல் அரிப்பின் காரணமாக இந்த இரசாயன ஆயுதங்களால் சுற்றுச்சூழலுக்குப் பேரழிவு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தைச் சேர்ந்த அறிவியல் அக்கடமி மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளதோடு போலாந்தின் பிரபல செய்தித்தாள் ஒன்று இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- உலக வாழ் இளைஞர்கள் அனைவருக்கும் உலக இளைஞர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ……
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகநாடுகள், இந்த நாளை , இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் தினமாகக் கொண்டாடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையானது, 1999 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஐ உலக இளைஞர் தினமாகக் கொண்டாட அறிவித்தது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். இவர்களின் கைகளிலேயே இந்த உலகம் உள்ளது. எதிர்காலத்தின் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் நிகழ்காலத்தைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டியது அவசியம். சிந்தனைகள் சிதறிச் செல்லும் தற்காலத்தில் சில இளைஞர்கள் வாழ்க்கை வண்ணத்தில் தாங்களே சேறு பூசிக் கொள்கின்றனர். வாழ்க்கை ஒரு முறைதான்.
அதனை வளத்தோடும் நலத்தோடும் வாழ வேண்டியது அதிமுக்கியமான ஒன்றாகும். தேச விடுதலை என்பதும் நாட்டின் முன்னேற்றம் என்பதும் இளைஞர்களிடமே தங்கியுள்ளது. இளைஞர்களை அதிகமாகக்கொண்ட நாடு வளமான நாடு என்றே கணிக்கப்படுகின்றது.
தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேயம், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றை ஒரு இளைஞன் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்’ என்று விவேகானந்தர் கூறியுள்ளார்.
தற்போதைய காலத்தில் போதைப்பாவனை, சமூகச் சீர்கேடுகள் போன்றவற்றிற்கு அதிக இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். தொலைந்து போன வாழ்வை மீட்பது கடினம்….
இளைஞர்களே…சிந்தியுங்கள், சுகமான சிறப்பான எதிர்காலம் என்பது உங்கள் கைகளிலேயே உள்ளது.
- சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்.
- விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் – கோட்டபாயவுக்கு கோரிக்கை.
- எமது வாழ்நாள் முடிவதற்குள் நீதியின் தீர்ப்பைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்