இலங்கைசெய்திகள்

எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் இப்படித்தான் கணிக்கப்படும்!!

Electricity bill

பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கையை வைத்து எவ்வாறு நமக்கு வரப் போகின்ற புதிய கட்டணத்தை கணிப்பிடுவது??

அதனை கணிப்பிடும் முறை தொடர்பாக முழுமையான விளக்கத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் உங்கள் வீட்டில் உள்ள பழைய மின்சார பட்டியல் ஒன்றை எடுத்து உங்கள் வீட்டில் ஒரு மாதம் பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பாருங்கள்..

உங்கள் வீட்டில் பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கை அடிப்படையில் உங்களுக்கான கட்டணம் தீர்மானிக்கப்படும்..

வீட்டில் பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கை 30 ஆக அல்லது அதனை விட குறைவாக இருந்தால் ஒரு அலகுக்கு எட்டு ரூபாய் வீதம் அறவிடப்படும்…இதைவிட மேலதிகமாக நிலையான கட்டணமாக 120 ரூபாய் அறவிடப்படும்.

இது உங்கள் வீட்டில் 29 அலகுகள் பாவிக்கப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம்..

■ 29×8 + 120 = 352 ரூபாய்

வீட்டில் பாவிக்கப்படும் அலகுகளின் எண்ணிக்கை 31 தொடக்கம் 60 ஆக இருந்தால் ஒரு அலகுக்கு 10 ரூபாய் வீதம் அறவிடப்படும். இதைவிட மேலதிகமாக நிலையான கட்டணமாக 240 ரூபாய் அறவிடப்படும்.

உங்கள் வீட்டில் 59 அலகுகள் பாவிக்கப்படுகின்றது என எடுத்துக் கொள்வோம்..

■ 59×10 + 240 = 830 ரூபாய்

மேலே அனைத்தும் நீங்கள் 60 அலகுகளை விட குறைவாக பாவிக்கும்போது மட்டுமே செல்லுபடியாகும்..

உங்கள் வீட்டில் 60 அலகுகளை விட அதிகமாக பாவிக்கப்பட்டால் அதற்கு வேறு விதமான கட்டணம் அறவிடப்படும்.

உங்கள் வீட்டில் 60 அலகுகளை விட அதிகமாக பாவிக்கும்பொழுது முதல் 60 அலகுகளுக்கு 16 ரூபாய் வீதமும்.

61-90 களுக்கு அதே 16 ரூபாய் வீதமும் நிலையான கட்டணமாக 360 ரூபாய் அறவிடப்படும்.

● நீங்கள் மாதம் 85 units மின்சாரம் பாவிப்பவராயின்

■ மின் கட்டணம் = (85×16)+360 = 1720.00

91-180 அலகுகளுக்கு 50 ரூபாய் வீதமும் அறவிடப்படும்.. நிலையான கட்டணமாக 960 ரூபாய் அறவிடப்படும்

நீங்கள் மாதம் 115 units மின்சாரம் பாவிப்பவராயின்

■ மின் கட்டணம் = (90×16)+(25×50)+960 = 3650.00

180 அலகுக்கு மேலதிகமாக பாவிக்கப்பட்டால் 75 ரூபாய் வீதமும் நிலையான கட்டணமாக 1500 ரூபாய் அறவிடப்படும்..

நீங்கள் மாதம் 250 units மின்சாரம் பாவிப்பவராயின்

■ மின் கட்டணம் = (90×16)+(90×50)+(70×75)+1500 = 12690.00

Related Articles

Leave a Reply

Back to top button