பத்திரிகை முன் பக்கத்தில் இடம்பிடிக்கக்கூடிய தொகுப்புச் செய்திகள்!!
Lead news
- சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில்!!
: 2. சாரதி அனுமதிபத்திர மருத்துவ பரிசோதனைக் கட்டணம் ரூபா 1500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
3. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனைக் கட்டணத்தை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4. . யுவான் வாங் – 5 கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து ஆகஸ்ட் 17 ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இக்கப்பலின் வருகைக்கான உண்மைக் காரணத்தை விளக்குமாறு இந்தியா கேட்டிருந்த நிலையில் இலங்கை சீனாவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்து மூலமாக முறையான இராஜதந்திர அணுகுமுறையுடன் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
5. சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ஆகியோர் பதவி விலகினர் . ஆகவே நாட்டு நலனுக்காக ஜனாதிபதி ரணிலின் நிபந்தனையற்ற கோரிக்கைக்கு ஆதரவை வழங்குவோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
6. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள ‘யுவான்5’ கப்பல் விவகாரத்தால் அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிடவுள்ளது எனக இராஜதந்திர வட்டாரங்களால் கூறப்படுகிறது,.
அமெரிக்க தூதுவர் ஜூலிசாங் நாளை இந்த ஆட்சேபனையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜதந்திர மொழியில் டிமாஷ் எனக்கூறப்படும் இச்சம்பவம் இலங்கையில் முதல் தடவையாக நிகழும் எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் அது இலங்கை – அமெரிக்க உறவில் பாதக நிலையை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியில் பின்னடைவு ஏற்படலாம் எனவும் ஜெனீவாவில் இலங்கைக்கு பாதகமான நிலை உருவாகலாம் எனவும் அவர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் விவகாரத்தில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள இந்தியா, சீனாவுக்கு தெளிவான செய்தி ஒன்றை வழங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்தக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7. ஹிரோஷிமா தாக்கப்பட்டு இன்றுடன் 77 வருடங்கள்….
அமெரிக்காவினால் முதலாவது அணுகுண்டு வீசப்பட்டு 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹிரோசிமாவில் 1945 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி இந்தக் குண்டு எறியப்பட்டது .
இந்தக் குண்டு எறியப்பட்டதன் பின்னர் நகரில் இருந்து 600 மீற்றர் உயரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது . இதனை அடுத்த இரண்டாவது குண்டை மூன்று தினங்களுக்குப் பின்னர் நாகசாகி நகரில் அமெரிக்கா வீசி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
குறைந்த பட்சம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர் . இன்றளவும் அதன் பாதிப்புகள் உணரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும் .
8. இலங்கையில் இருந்து சென்ற மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழ்நாடு சென்ற 10 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி 5வது மணல் திட்டில் தஞ்சமடைந்த நிலையில் இந்த விடயத்தினை அறிந்து இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் தனுஷ்கோடி மணல் திட்டுக்கு விரைந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
9. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா உப பிரிவு வேகமாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கொரோனா நோயாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது டியூ – 5 என்ற கொரோனா உப பிரிவு கொழும்பில் வேகமாகப் பரவுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
10. இலங்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டு அறிக்கை ஒன்றினூடாகத் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதில்லை என்பதை இலங்கை இராணுவம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியே தமது குறைகளை மௌனமான முறையில் வெளிப்படுத்தும் நிலையைத் தூண்டியுள்ளது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அமைதியான எதிர்ப்பாளர்கள் மீதான பயணத்தடை மற்றும் பிற நிபந்தனைகளை நீக்குமாறும் போராட்டக்காரர்களைப் பயங்கரவாதிகள் எனவும் குற்றவாளிகள் எனவும் முத்திரை குத்துவதை நீக்குமாறும் அந்த அறிக்கையின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
11. எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் உணவுப்பொதி , தேநீர் கோப்பையின் விலைகள் குறைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
12. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக, செயன்முறைப் பரீட்சையில் தோற்ற முடியாமல் போனவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் மற்றும் பரீட்சாத்தியின் தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலான விண்ணப்பங்களை இங்கு காண்பிக்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13. இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14. பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தலுக்குப் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
15. கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை மக்களுக்கு வழங்குவதற்காக நடமாடும் தடுப்பூசி நிலையங்களை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப குறித்த நடமாடும் நிலையங்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை பிரதான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளிடமிருந்து (MOH) பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
16. சர்வ கட்சி ஆட்சி முறைக்கு இணக்கம் காணமுடியாத நிலையில் சர்வ கட்சி நிர்வாக முறையை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.