WhatsApp நிறுவனம் அவ்வப்போது பயனாளர்களின் வசதிக்காக புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஒரு அப்டேட் குறித்தான அறிவிப்பு ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்தில் அவ்வபோது பலவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, பயனாளர்களின் ரகசியங்களை வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பதால் பலரும் வாட்ஸ்அப் செயலியை எவ்வித பயமும் இல்லாமல் உபயோகித்து வருகின்றனர். மேலும், தகவலை பகிர்வதற்கு எந்த தொகையும் வசூலிக்காததால் வாட்ஸ்அப் செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வாட்ஸ்அப் செயலியின் மூலமாக உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இலவச வீடியோ கால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளர்களின் வசதிக்காக அவ்வப்போது சில அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, அண்மையில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும் வசதியை வழங்கியது.
மேலும், வாட்ஸ்அப் குரூப்பில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை குரூப் அட்மின் நீக்கும்படியான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் உறுப்பினர்களின் வரம்பை 256ல் இருந்து 512 ஆக உயர்த்தியது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வழங்க இருக்கிறது. அதாவது, ஒருவர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறினால் அந்த நபர் Left என காண்பிக்கப்படாது.
மேலும், குரூப்பில் இருந்து யார் வெளியேறியது என்பதை பார்க்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. அதாவது, Past Participants என்கிற பகுதிக்குள் சென்று பார்த்தால் கடந்த 60 நாட்களில் யார் யாரெல்லாம் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம். மேலும், இந்த அப்டேட் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.