நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு இன்று பி.ப தொடக்கம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விசேட பணிப்புரையை போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். அதோடு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மீன்பிடி, சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளுக்கு போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ராணில் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.