லண்டனில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக ஆங்காங்கே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதிக வெப்பநிலை காரணமாக லண்டனில் பல தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் வாகனங்கள் மிகவும் தேவைப்படும் இடங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தீயணைக்கும் வீரர்களைச் சம்பவ இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு வாகன ஆதரவை வழங்குகிறோம்.
மேலும் எங்களால் முடிந்த ஆதரவை வழங்க அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் எனவும் LFB அறிவுரைகளை லண்டன் வாசிகள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக வரும் மணித்தியாலங்களில் பொலிஸ் அதிகாரிகள் திறந்த வெளிகளில் ரோந்து செல்வார்கள் எனவும் மெட் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பார்பிக்யூ தயாரிப்பு அல்லது நெருப்பு வைக்க வேண்டாம் எனவும், உடைந்த போத்தல்கள் அல்லது கண்ணாடிகளைத் தரையில் விடாதீர்கள் எனவும், சிகரெட்டைப் பாவிக்க வேண்டாம் எனவும் லண்டன் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.