இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார்.
பதிலாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் டளஸ் அழப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவே இன்று முன்மொழிந்தார்.
இதனை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவுக்காக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன முன்மொழிந்தார்.
இதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுர திசாநாயக்கவை ஜனாதிபதி தெரிவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை வழிமொழிந்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.