செய்திகள்புலச்செய்திகள்

கோத்தாவை கைது செய் ! சட்டத்தின் முன் நிறுத்து !! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!!

Arrested

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.

அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில் நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம், தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button