அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் வீதித் தடைகளை அமைத்து பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.