இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜூலை முதல் 10 அத்தியாசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!!
Import

அரிசி, சீனி, பருப்பு, கிழங்கு, பால்மா, நெத்தலி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை, ஜுலை 01 முதல் திறந்த கணக்கு முறைமை மூலம் இறக்குமதி செய்யவதாக சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவிதுள்ளார்.
இதன்படி, 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குள் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்திய கடன் எல்லை வசதியிலும், அத்தியாசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.