யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும் 10 மணிக்குப் பின்னர் பெற்றோல் வந்த போது சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கு மாத்திரமே பெற்றறோல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதும் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட அங்கு பெற்றோல் வழங்குவது இடைநிறுத்தப்பட்டது.