எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை ஆகிய முக்கிய அதிகாரிகளை இவர்கள் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.